பொலிஸ் ஆணைக்குழுவை அமைத்ததால் அரசியல் தலையீடுகளை கட்டுப்படுத்த முடிந்தது

0
489
siri Hettige police commission constituted 19th Amendment constitution

(siri Hettige police commission constituted 19th Amendment constitution)

19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் காரணமாக அதுவரை பொலிஸ் துறையை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தி வந்த சக்திகளை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்ததாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் சிறி ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது பொலிஸ் திணைக்களத்தினுள் அரசியல் தலையீடுகள் குறைந்து துறைசார்ந்த மிகவும் நிபுணத்துவம் மிக்கவர்களின் சேவையின் கீழ் சிறந்த வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பொலிஸ் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக புத்திஜீவிகளுடன் இடம்பெற்ற விசேட செயலமர்வின் போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

பொலிஸ் ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் ஊடாக பொலிஸ் திணைக்களத்தினுள் பல மாற்றங்ளக் நிகழ்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை முழுவதும் மாவட்ட மட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் கருத்துக்கள் மற்றும் பொதுமக்களின் யோசனைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

18 வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைந்து செயழற்ற நிலைமை தோன்றியிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், விசாரணைகளை மாத்திரம் முன்னெடுப்பதை தவிர வேறெந்த பணிகளையும் முன்னெடுக்க முடியாத நிலை தோன்றியிருந்ததாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் சிறி ஹெட்டிகே தெரிவித்தார்.

(siri Hettige police commission constituted 19th Amendment constitution)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites