ஒவ்வொரு கிழமையும் எரிபொருள் விலையில் மாற்றம்?

0
354
Fuel Price CPC

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை ஒவ்வொரு வாரமும் மீளாய்வுக்குட்படுத்த, நிதியமைச்சு , அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Fuel Price CPC

சிரேஷ்ட அமைச்சரவை அதிகாரியொருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு, ஜனாதிபதியா இரத்துச் செய்யப்பட்டமையை அடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

மேலும் எரிபொருள் விலைத்தளம்பலால் , திறைசேரிக்கு ஏற்படும் நட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அண்மையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்துக்கு, பெற்றோலிய வள அமைச்சு மற்றும் நிதியமைச்சுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மையே பிரதான காரணமென தகவல்கள் தெரிவிக்கின்றன.