தமிழ் மக்களுக்காவே பதவியை இராஜினாமா செய்தேன்! விஜயகலா மகேஸ்வரன் உருக்கம்!

0
459
Minister Vijayakala Maheswaran Resigning Ministry Reason

கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Minister Vijayakala Maheswaran Resigning Ministry Reason

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்­கையில்,

யாழ்.குடா­நாட்டில் வன்­மு­றை­களும் குற்­றச்செ­யல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. ஆறு வயது சிறுமி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 59 வய­தான வயோ­திப பெண் பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் வீட்டில் கொள்­ளையும் இடம்­பெற்­றுள்­ளது. வாள்­வெட்டு சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. போதை­வஸ்து பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் மக்­களின் துன்­பங்­களை தாங்­க­ மு­டி­யாது புலி­களின் காலத்தை நினை­வூட்ட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

ஆறு வயது சிறு­மியின் படு­கொலை உட்­பட வன்­மு­றைகள் குடா­நாட்டில் அதி­க­ரித்து வரு­வ­தனால் மக்கள் அச்­சத்தின் மத்­தியில் வாழும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் நிம்­ம­தி­யின்றி வாழ்­கின்­றனர். இந்த நிலையில் மக்­களின் துன்­பங்­களை வெளிக்­கொ­ணர வேண்­டி­யது அவர்­க­ளது பிர­தி­நி­தி­யான எனது கட­மை­யாகும். இத­னால் தான் மக்­களின் துன்­பங்­களை வெளிக்­கொண்டு வரும் வகையில் எனது கருத்­தினை தெரி­வித்­தி­ருந்தேன்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிர­த­மரும் கட்சித் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க நான் யாழ்ப்­பா­ணத்தில் தங்­கி­யி­ருந்­த­போது என்­னுடன் தொடர்­பு­ கொண்டு எனது கருத்து குறித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது எனது நிலைப்­பாட்­டினை அவ­ருக்கு விளக்கி கூறினேன்.

தற்­போது எனது உரை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையால் கட்­சியின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் தற்­கா­லி­க­மாக அமைச்சு பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நான் தயார் என்றும் பிர­த­ம­ரிடம் எடுத்து கூறினேன். இதற்­கி­ணங்­கவே எனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளேன்.

மக்­களின் துன்­பங்­களை எடுத்­துக்­கூற முயன்றேன். இதனால் தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ள­தனால் எனது அமைச்சுப்பத­வி­யை மக்­க­ளுக்­காக மகிழ்ச்­சி­யுடன் இரா­ஜி­னாமா செய்­துள்ளேன் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites