காவல் அதிகாரியை தாக்கிய இளம் பெண்!

0
124

(young girl attacked  police)

கண்ணூர் மாவட்டம் பழையங்காடி காவல் நிலையத்துக்குள் புகுந்த இளம்பெண், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவல் அதிகாரியையும் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பழையங்காடி காவல் நிலையத்தில், திவ்யா என்ற இளம் பெண் திடீரெனப் புகுந்து,  சப்- இன்ஸ்பெக்டர் பினுமோகனின் அலுவலக அறையைத் திறந்து உள்ளே புகுந்துள்ளார்.

அவரைத் தடுக்க முயன்ற பெண் காவல் அதிகாரி லீனாவையும் தாக்கித் தள்ளிவிட்டிருக்கிறார் திவ்யா. பின்னர், தனது இருக்கையில் அமர்ந்திருந்த சப் இன்ஸ்பெக்டரை பினுமோகனின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கியிருக்கிறார்.

இளம்பெண் திவ்யா

மேலும், பேப்பர் எடையை எடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மீது எறிந்திருக்கிறார். பேப்பர் வெயிட் குறி தவறி அலுமாரியின் கண்ணாடியை உடைத்தது. இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் திவ்யாவை மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “திவ்யாவுக்கு எதிராகக் குடும்ப வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என திவ்யா கூறியுள்ளார்.

tags;-young girl attacked  police

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :