தென்னாபிரிக்க அணிக்கெதிரான இலங்கை குழாம் சற்றுமுன் அறிவிப்பு!!!

0
833
Sri Lanka squad vs South Africa test tour 2018

(Sri Lanka squad vs South Africa test tour 2018)

தென்னாபிரிக்க அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணிக்குழாத்தை கிரிக்கெட் சபை சற்றுமுன் அறிவித்துள்ளது.

இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கான அணித்தலைவராக மே.தீவுகள் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைப்பெற்றிருந்த தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் உப தலைவராக சுராங்க லக்மால் செயற்படவுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள அணிக்குழாத்தில் உபாதையிலிருந்து திமுத் கருணாரத்ன, மே.தீவுகள் தொடருக்கு இடையில் நாடு திரும்பியிருந்த எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் மே.தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த லக்ஷான் சந்தகன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அணிக்குழாத்தில் குசல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தாலும், உடற்தகுதியை பொருத்தே இவர்கள் போட்டிகளில் கலந்துக்கொள்வார்கள் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணி விபரம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), எஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரத்ன, குசால் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக, தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், சுராங்க லக்மால், டில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், கசுன் ராஜித

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Sri Lanka squad vs South Africa test tour 2018, Sri Lanka squad vs South Africa test tour 2018,Sri Lanka squad vs South Africa test tour 2018