விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு

0
894
Vijayakala LTTE Comment

கண்டியில் தெல்தெனிய இளைஞர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இன்று விஜயகலாவிற்கு பொருந்தும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். (Vijayakala LTTE Comment Gnanasara Thera Action Talk)

நாட்டுக்குள் அனைவருக்கும் பொதுவானதொரு சட்டமே காணப்படவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் குழுவொன்று கோட்டே ஸ்ரீகல்யாணி தர்ம மகா சபையின் மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடியிருந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற கருத்து தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் விஜயகலாவின் பேச்சுத் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பதை அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் தெல்தெனிய இளைஞர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இன்று விஜயகலாவிற்கும் பொருந்தும் என்றும் எனவே இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே சட்டமே காணப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டினது பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிற்குள் இரு வேறு சட்டங்களுக்கு இடமளிக்கக முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Vijayakala LTTE Comment Gnanasara Thera Action Talk