(tamilnews murasarai paper release kilinochi muruganda collage)
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் ஊடக கற்கை மாணவர்கள் “முரசறை” என்ற சுவர் பத்திரிகையை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.
அண்மையில் பாடசாலை அதிபர் ச.புண்ணியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் கண்டாவளை கோட்டக் கல்வி அதிகாரி சு.தர்மரத்தினம் கலந்துகொண்டு பத்திரிகையை வெளியிட்டு வைத்துள்ளார்.
இலங்கைப் பாடசாலைகளில் இவ்வாறான பத்திரிகை வெளியீடு இடம்பெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறிய பாடசாலை அதிபர் ச.புண்ணியமூர்த்தி, இந்தச் செயற்பாடு எமது மாணவர்களின் மிக முன்னுதாரணமான செயற்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
குறித்த சுவர் பத்திரிகை பாடசாலையில் இடம்பெறும் கல்வி மற்றும் இணைபாட விதானச் செயற்பாடுகள் குறித்த செய்திகளையும், கல்வி உயர்வு சாதனைகள் மற்றும் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஊடாட்டம் சார்ந்த செய்திகளையும் தாங்கி வரும் என நிகழ்வில் பேசிய ஊடக ஆசிரியர் பா.பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய முயற்சிகள் பாடசாலை மாணவர்களின் எழுத்து மற்றும் ஊடக ஆளுமையை வெளிக்கொண்டு வருதற்கு பெரிதும் உதவும் என கண்டாவளை கோட்டக் கல்வி அதிகாரி சு.தர்மரத்தினம் கூறினார்.
அத்துடன் மாணவர்கள் தமக்குள் இருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(tamilnews murasarai paper release kilinochi muruganda collage)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com