விஜயகலா தொடர்பில் கருத்து கூற தயாரில்லை – நழுவிய தமிழ் கூட்டமைப்பு!

0
695
Minister Vijayakala Maheswaran Issue TNA Avoid Say Opinion

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான தமது நிலைப்பாடு தொடர்பில் தமிழ் கூட்டமைப்பினர் என்ன கருத்து கூறவுள்ளனர் என பலதரப்பும் ஆவலுடன் எதிர்பார்த்துவுள்ளனர். Minister Vijayakala Maheswaran Issue TNA Avoid Say Opinion

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியமை தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ள கருத்துக்களின் பிரகாரம்,

விஜயகலா தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துவதாக சபாநாயகர் கூறியுள்ளதால், விசாரணைகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்து வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விஜயகலாவின் கருத்துக்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபர் விசாரிக்கவுள்ளநிலையில் கூட்டமைப்பினர் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் ஒதுங்கியுள்ள போதும் தமிழ் மக்கள் மத்தியில் விஜயகலா மகேஸ்வரன் மீதான அனுதாபம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites