உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ள “தமிழீழம்” அணி… : வெளியாகும் கடும் எதிர்ப்பு!!!

0
924
CONIFA world football cup 2018 news Tamil

கொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன உதைப்பந்தாட்ட கழகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படும், உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழீழம்’ அணியை இம்முறை கொனிஃபா உலகக்கிண்ணத்தில் இணைத்தமைக்கு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. CONIFA world football cup 2018 news Tamil

இதுதொடர்பில் குறிப்பிட்டுள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

ஒரு தரப்பினரை மாத்திரம் அடையாளப்படுத்தும் அணியொன்றை சர்வதேச போட்டியொன்றில் இணைத்துக்கொள்வது, சமூகங்களிடையில் வேறுபாட்டை தோற்றுவிக்கும். இதனால் தமிழீழம் அணியை நீக்கி போட்டித் தொடரை நடத்துமாறு, சுயாதீன உதைப்பபந்தாட்ட கழகங்களின் கூட்டமைப்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன், சமதானத்துடன், அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இப்படியான காலப்பகுதியில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில், ஒரு தரப்பினரை மாத்திரம் அடையாளப்படுத்தும் அணியை இந்த போட்டித் தொடரில் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொனிஃபா (CONIFA) நடத்தும் உலகக் கிண்ணத் தொடரில், பிபா உறுப்புரிமை அற்ற நாடுகள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினங்கள், அகதிகள் மற்றும் சிறு பிராந்தியங்களாக வாழ்வோர் என்போர் பங்குபற்றுகின்றனர்.

கொனிஃபா (CONIFA) என அழைக்கப்படும் இந்த சுயாதீன உதைப்பந்தாட்ட கழகங்களின் கூட்டமைப்பு 2014ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உதைப்பந்தாட்ட கழகங்களின் அமைப்பு என்பதும் 2 வருடங்களுக்கு ஒரு முறை போட்டிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

CONIFA world football cup 2018 news Tamil, CONIFA world football cup 2018 news Tamil,CONIFA world football cup 2018 news Tamil