விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதில் என்ன தவறு; அனந்தி சசிதரன்

0
508
ananthi sasitharan comments vijayakala maheswaran statement

விடுதலைப் புலிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கங்கள், செயற்பாடுகளைப் பற்றி பேசுவதில் என்ன தவறு உள்ளதென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். (ananthi sasitharan comments vijayakala maheswaran statement)

விடுதலைப் புலிகள் செயற்பட்ட சமகாலத்தில் வாழ்ந்த அனைவருமே அந்த விடயங்களை நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அற்றிய உரை தொடர்பில் அனந்தி சசிதரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலைச் செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றன.

அவற்றின் வலிகளை விஜயகலா நேரில் பார்த்துள்ளார். அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளார்.

அவர்களின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற போதும், அதன் ஊடாக எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு அவருக்கு இயலவில்லை.

நன்மை பயக்கும் எந்த நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தாலும், பெண் இராஜாங்க அமைச்சராக இருப்பதால், அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆயிரமாயிரம் தடைகள் உருவாக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்,

இவ்வாறான பல்வேறு நெருக்கடியான நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே, விடுதலைப் புலிகளை அவர் நினைவுபடுத்தியுள்ளதாகவும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; ananthi sasitharan comments vijayakala maheswaran statement