பிரபல சிங்கள நடிகர் ரோய் டீ சில்வா காலமானார்

0
552
Veteran film actor Roy de Silva passed away

இலங்கை சினிமா துறையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரோய் டீ சில்வா நேற்றிரவு காலமானார். (Veteran film actor Roy de Silva passed away)

உடல் நலக் குறைவால் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோய் டீ சில்வா, தனது 80 ஆவது வயதில் நேற்று (30) இரவு காலமாகியுள்ளார்.

1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி பிறந்த இவர், 1964 ஆம் ஆண்டு சிங்கள சினிமாவில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார்.

நகைச்சுவை சினிமாவில் முன்னோடியாக விளங்கிய இவர் இயக்கிய பல படங்கள் சிங்கள சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் இழப்பு சிங்கள சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:Veteran film actor Roy de Silva passed away,Veteran film actor Roy de Silva passed away,Veteran film actor Roy de Silva passed away