(Volvo XC40 First Full Electric Model)
வால்வோ நிறுவனத்தின் புதிய தலைமுறை எஸ்60 செடான் மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் வால்வோ நிறுவன தலைவை வடிவமைப்பாளர் தாமஸ் இன்கென்லத் வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 என தெரிவித்தார். மேலும் அடுத்த தலைமுறை XC90 மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
போல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.
வால்வோ XC40 EV தயாரிப்பு பணிகள் 2021-ம் ஆண்டு துவங்கும் என்றும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டுவாக்கில் 50% விற்பனை எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து கிடைக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Volvo XC40 First Full Electric Model