மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரை புகையிரத சேவை

0
422
SL launch Light Rail System soon

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான புகையிரதத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. (SL launch Light Rail System soon)

இலங்கையின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு இடையிலான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதான குறிக்கோளுடன் இலகு புகையிரத சேவை ஒன்று அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச நிறுவனமான ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

16 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த புகையிரத நிர்மாணப் பணிகளின் செலவு 1.7 பில்லியன் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலபேயில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகவும் தற்போது 90 நிமிடங்களில் பயணம் செய்யும் புகையிரத சேவை, 40 நிமிடங்களில் பயணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புகையிரதத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஜப்பான் நாட்டிற்கு 40 வருட கடன் திட்டத்தின் கீழ் 100/1 வீத வட்டியுடன் 12 வருட சலுகை காலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

tags :- SL launch Light Rail System soon

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites