மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்

0
434
incident shocked students Andhra raising alcohol harassing students

incident shocked students Andhra raising alcohol harassing students

ஆந்திராவில் மதுவை ஊற்றிக்கொடுத்து சக மாணவியை பலாத்காரம் செய்து மாணவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி சகமாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடன் படிக்கும் மாணவருக்கு பிறந்த நாள் என கூறி ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் அந்த மாணவியும் பங்கேற்றுள்ளார்.

நேரம் செல்ல செல்ல மதுவுடன் ஆட்டம் பாட்டம் என கலைகட்டியது பார்ட்டி. அப்போது மாணவியையும் சக மாணவர்கள் மதுக்குடிக்க தூண்டியுள்ளனர். மாணவி மறுத்த போதும் வற்புறுத்தி மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளனர்.

மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பு நண்பர்களான சிவா ரெட்டியும், கிருஷ்ண வம்சியும் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் மாணவியை பலாத்காரம் செய்ததை மாறி மாறி வீடியோ எடுத்துள்ளனர்.

வீடியோவை வைத்து மிரட்டியே அந்த மாணவியை பலமுறை அவர்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு படிப்பு முடிந்த நிலையில் தன்னுடன் படித்த மற்றொரு மாணவனான பிரவீன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு பலாத்கார வீடியோ தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு நிலைகுலைந்தார் அந்த மாணவி.

இதனால் கடந்த 2 மாதமாக கவலையுடன் இருந்த மாணவியை பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோருடன் சென்று போலீஸில் அவர் புகார் அளித்தார். இதனடிப்படையில் பிரவீனை கைது செய்த போலீசார், மற்ற 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

incident shocked students Andhra raising alcohol harassing students

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :