‘மகள் தூக்கில் தொங்கியபடி துடித்தாள்” : கதறும் பெற்றோர் : வெல்லாவெளியில் மனதை பதறவைக்கும் சம்பவம்

0
115
batticaloa Vellavely 17 old girl commits suicide

மட்டக்களப்பு வெல்லாவெளி விவேகானந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுக் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.(batticaloa Vellavely 17 old girl commits suicide)

இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

17 வயதுடைய அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை ஐந்து மணியளவில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் குறித்த யுவதி தனது அறையின் கதவினை பூட்டிக்கொண்டு கூரையின் கீழ் காணப்பட்ட மரப்பலகையில் சேலையினால் தூக்கிட்டு கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் வீட்டிற்கு வருகை தந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியபடி துடிப்பதை அவதானித்ததும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சேலையை அறுத்து யுவதியை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

எனினும் யுவதி உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யுவதியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கிட்டு கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகளுக்கு நாங்கள் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார். அந்த கடவுளுக்குதான் தெரியும். ஐயோ எனது மகளை மீட்டு தாருங்கள். நான் அவள் இல்லாமல் எப்படி வாழப்போகின்றேன் என யுவதியின் தந்தை கண்ணீர் விட்டழுதார்.

tags :- batticaloa Vellavely 17 old girl commits suicide

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites