நொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்!

0
696
Senegal vs Colombia world cup 2018 news Tamil

பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் செனகல் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

குழு “எச்” இற்கான இந்த போட்டியில் பல சவால்கள் காத்துக்கிடக்கின்றன.

உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றக்கு முன்னேற இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமாகும்.

எச் குழுவின் புள்ளிப்பட்டியலில் ஜப்பான் 4 புள்ளிகள் முதலிடம், செனகல் 4 புள்ளிகள் இரண்டாம் இடம், கொலம்பியா 3 புள்ளிகள் மூன்றாம் இடம் என மிகவும் நெருக்கமான நிலையில் மூன்று அணிகளும் போட்டிப்போட்டுக் கொண்டுள்ளன.

அதிலும் செனகல் மற்றும் ஜப்பான் அணிகள் தங்களுடைய போட்டிகளை சமப்படுத்துமானால், இரண்டு அணிகளும் உலகக்கிண்ண வாய்ப்பை 5 புள்ளிகளுடன் வாய்ப்பை தக்கவைக்கும். கொலம்பிய அணி வெளியேறும்.

ஆனால் செனகல் அணி தோல்வியுற்று கொலம்பிய அணி வெற்றிபெறுமாயின் கொலம்பிய அணி நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெறும். என்பதுடன், ஜப்பான் அணி தோல்வியடைந்தாலும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு கிட்டும்.

இதனால் மூன்று அணிகளும் வெற்றிபெற்றால் தங்களுடைய நொக்கவுட் சுற்று வாய்ப்பை எந்த தடையுமின்றி தக்கவைக்க முடியும்.

செனகல் மற்றும் கொலம்பிய அணிகளை பொறுத்தவரையில், இதற்கு முன்னர் ஒரே ஒரு தடவை நேருக்கு நேர் மோதியுள்ளன. 2014ம் ஆண்டு நடைபெற்ற நட்புரீதியான போட்டியில் கொலம்பிய அணி 2-0 என வெற்றிபெற்றுள்ளது.

அதுமாத்திரமின்றி கொலம்பிய அணி 1990ம் ஆண்டுக்கு பின்னர் ஆபிரிக்க அணிகளுடனான இரண்டு மோதல்களிலும் வெற்றிபெற்றுள்ளது. 1990ம் ஆண்டு கெமரூன் அணிக்கெதிரான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. எனினும் 1998ம் ஆண்டு துனீஸியா மற்றும் 2014ம் ஆண்டு ஐவரி கோஸ்ட் அணிகளை கொலம்பியா வீழ்த்தியுள்ளது.

செனகலை பொருத்தவரையில் தென் அமெரிக்க அணிகளுடன் ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளது. 2002ம் ஆண்டு நடைபெற்ற உருகுவே அணிக்கெதிரான போட்டியை செனகல் அணி 3-3 என சமப்படுத்தியிருந்தது. இதனால் அந்த அணியின் வரலாறும் அவ்வளவு கீழ் இல்லை.

இதனால் இன்றைய போட்டியானது ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எவ்வாறாயினும் இம்முறை உலகக்கிண்ணத்தில் முக்கிய அணிகள் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. நடப்பு சம்பியனான ஜேர்மனி அணி வெளியேறியுள்ளது. ஆர்ஜன்டீன அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகின்றது. இதனால் எந்த போட்டி எப்படி நிறைவடையும் என்பதை யாராலும் எளிதாக கூறமுடியாது. போட்டி நிறைவடையும் வரை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

செனகல் மற்றும் கொலம்பிய அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு நடைபெறவுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Senegal vs Colombia world cup 2018 news Tamil, Senegal vs Colombia world cup 2018 news Tamil, Senegal vs Colombia world cup 2018 news Tamil