றெஜினா கொலை – அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமை; பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
392
Rejina murder School students civilians protest

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 06 வயதுடைய பாடசாலை மாணவியான றெஜினா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (Rejina murder School students civilians protest)

இன்று காலை ஏழு மணி முதல் சுழிபுரம் சந்தியில் வீதிகளை மறித்து, இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாணவியின் கொலை தொடர்பில் அரசியல்வாதிகளே, கல்வித்துறை சார் அதிகாரிகோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகோ குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை எனக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்கின்ற அனைவரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, கல்வியமைச்சு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டுமென்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு அவர்கள் வருகை தந்தாலே தமது போராட்டத்தை தாம் நிறுத்துவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tags :- Rejina murder School students civilians protest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites