பரிஸில் சாதனை படைத்த பயங்கரவாதி!

0
105
France give high security November 13 Paris attack terrorist

பாரிஸில், நவம்பர் 13 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், தற்போது உயிரோடுள்ள ஒரே பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாம் மருத்துவமனையிலிருந்து மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். France give high security November 13 Paris attack terrorist

சாலா அப்தெல்சலாம் Essonne இல் உள்ள Fleury-Mérogis சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் சிறைவைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், கடந்த ஜூன் 19 ஆம் திகதி, சிறைச்சாலையில் இருந்து 15 Km தொலைவில் உள்ள Corbeil-Essonnes மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

அச்சமயம் மிகுந்த பாதுகாப்புடன், மருத்துவ அறையின் வெளியேயும், மருத்துவமனையைச் சுற்றியும் மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததோடு, கண்காணிப்பு கமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டிருந்தான்.

இந்நிலையில், சிகிச்சைகளை முடித்துக்கொண்டு ஐந்தாவது நாளான கடந்த சனிக்கிழமை நண்பகலில் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளான். இத்தகவல் பாதுகாப்பு காரணங்களால் இன்றே வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸில் அதிகம் பாதுகாக்கப்பட்ட கைதியாக சாலா அப்தெல்சலாம் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- France give high security November 13 Paris attack terrorist

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்