(tamilnews football defending champion fifa world cup first round)
ஃபிபா உலகக் கோப்பை தொடரின் நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறுவது தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம்பெற்றுள்ளது.
21 வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி இருந்தது.
நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி, ஐந்தாவது முறையாகவும் வென்று, அதிக முறை கோப்பையை வென்ற பிரேசிலின் சாதனையை சமன் செய்யும் நோக்குடன் இருந்தது.
எப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது.
மெக்சிகோ 1 – 0 என ஜெர்மனியை வென்றது. தனது இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது.
இன்று நடந்த தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் தான், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைக்கு ஜெர்மனி தள்ளப்பட்டது.
ஆனால், பல குளறுபடிகளுக்கு மத்தியில் முழு நேரமும் ஒரு நடப்பு சாம்பியனுக்கான வலுவுடன் ஜெர்மனி விளையாடவில்லை.
கடைசி கட்டத்தில் 2-0 என தென் கொரியா வென்றது. ஜெர்மனி மூட்டையைக் கட்ட வேண்டியதாயிற்று.
உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளன.
2006 இல் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2010 இல் முதல் சுற்றில் வெளியேறியது. 2010 இல் வென்ற ஸ்பெயின், 2014 இல் வெளியேறியது.
2014ல் வென்ற ஜெர்மனி, தற்போது முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதற்கு முன் 1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002ல் முதல் சுற்றில் வெளியேறியது.
(tamilnews football defending champion fifa world cup first round)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நடிகனாகி இருந்தால் நானும் ஜெயலலிதாவோடு நடித்திருப்பேன்: துரைமுருகன்
- இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட குண்டுகள் 10 வாகனங்களை ஒரே நொடியில் சிதைக்ககூடியவை
- கட்டுநாயக்க விமானநிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டு கடிதங்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்
- மிகப்பெரிய கடற்படை பயிற்சி ஆரம்பம்
- அவசர இழப்பின் போது அதனை ஈடு செய்ய அரசாங்க களஞ்சியத்தில் சேமிப்பில்லை
- மகிந்தவை பிரதமராக்குவதே 16 பேரின் இலக்கு – அதை தவிர வேறென்ன வேலை
- நல்லாட்சி அரசாங்கம் ஹிட்லரை பின்பற்றுகிறது – நிழல் உலக குழு உறுப்பினர்களை கொலை செய்வதை ஏற்க முடியாது
- இலங்கை அணி தோல்வி அடையும் போது சூதாட்ட காரர்களின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்யுங்கள்
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- மாணவர்களையும் விட்டுவைக்காத பதவி மோகம் – பைசூலை கொலை செய்தவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு
Tamil News Group websites