அதிக உணர்ச்சி வசப்பட்ட மாரடோனா – திடீர் சிகிச்சையளித்த மருத்துவக் குழு!

0
194
Argentine Maradona looking excitement World Cup football tournament

(Argentine Maradona looking excitement World Cup football tournament)

அர்ஜென்டினா – நைஜீரியா இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் போது காலரியில் அமர்ந்து உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் ஜாம்பவான் டியகோ மாரடோனாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவக் குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர்.

அர்ஜென்டினா முன்னாள் சூப்பர் ஸ்டார் மாரடோனா ரஷ்யாவில் தங்கியுள்ளார்.

தமது நாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகமளிக்கும் வகையில் போட்டிகளை நேரில் பார்த்து ஊக்குவித்து வருகிறார்.

அர்ஜென்டினாவின் வெற்றிக்காக குரல் கொடுத்து வரும் அவர் போகிற போக்கில் பயிற்சியாளர் சம்பாவ்லியையும் ஊமக் குத்தாக குத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், நேற்றைய அர்ஜென்டினா வெற்றி அவரை அதீதமாக உணர்ச்சி வசப்பட வைத்து விட்டது.. விளைவு: டாக்டர்கள் வர வேண்டியதாகி விட்டது.!

நேற்று நடந்த முக்கியமான போட்டியில் நைஜிரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது.

இதை அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர். குறிப்பாக மைதானத்தில் இருந்த மாரடோனா.

உணர்ச்சிவசப்பட்ட மாரடோனா உண்மையில் நேற்றைய போட்டியின்போது மாரடோனா மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

மெஸ்ஸி முதல் கோலடித்தபோது அவர் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டார் (சிஷ்யப் பிள்ளையாச்சே, இருக்காதா பின்னே!). 2 வது கோலுக்கு பெரும் உற்சாகம் அடுத்து 86 வது நிமிடத்தில் மார்கஸ் ரோஜோ போட்ட கோல் மாரடோனோவை பெரும் உற்சாகத்தில் மூழ்கடித்து விட்டது.

இருக்கையிலிருந்து எழுந்து அவர் அதீத உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

மருத்துவக் குழு விரைந்தது ஆனால் இந்த உற்சாகம் அவரது உடலில் லேசான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

உடனடியாக விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு சில சிகிச்சைகளை அளித்து நார்மலாக்கினர்.

குட்டித் தூக்கமும் – ஓவர் உற்சாகமும் இந்தப் போட்டியின்போது விதம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்தியபடி இருந்தார் மாரடோனா.

மெஸ்ஸி கோலடித்தபோது உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர் பின்னர் சிறிது குட்டித்தூக்கமும் போட்டார்.

மார்கஸ் கோலடித்த போது எழுந்து நின்று உற்சாகக் குரல் எழுப்பினார். இடையில் நடு விரலைக் காட்டியும் உற்சாகம் காட்டினார்.

(Argentine Maradona looking excitement World Cup football tournament)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites