இனி முழு நேரமும் அரசியல்தான்! – கமலஹாசன்!

0
875
now full time politics! - kamal hassan!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், மரியாதை நிமித்தமாகவே ராகுலையும் சோனியாவையும் சந்தித்தேன். கெஜ்ரிவால் பெங்களூரில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. காங்கிரஸ் தலைவரை சந்தித்ததால் அரசியலில் ஒரு வழிப்பாதையில் செல்கிறேன் என்று சொல்ல வேண்டாம், அரசியலில் என்னுடைய பாதை என்ன என்பதை நான் முடிவு செய்து விட்டேன் என்று அவர் தெரிவித்தார்.now full time politics! – kamal hassan!

காவிரி விவகாரத்தில் வெற்றி விழா கொண்டாட வேண்டியது விவசாயிகள்தான். மற்றவர்கள் அதற்கு வழிபடவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் எண்ணம் அனைவரின் எண்ணமும் கூட. எனவே ஆணையம் அமைவதற்கு போதுமான அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. அதை ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறோம். மேலும் விமர்சனம் செய்வோம் என்று தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் போது மக்கள் நீதி மய்யத்தின் முடிவு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து முடிவு எடுப்பேன். இப்போது அது குறித்து சொல்ல முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :