{ 9 girl saved lives 2000 people }
திரிபுராவில் பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் மண்சரிவில் இருந்து ரயிலை காப்பாற்றி அதில் பயணம் செய்த 2000 மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
திரிபுராவின் தன்சேரா பகுதியில் வசித்து வருகின்றார் சுமதி என்ற 9 வயது சிறுமி. அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் அவரின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார்.
அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால் பல இடங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்போது மண்சரிவை அறியாத நிலையில் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் வருவதை கவனித்த சிறுமி உடனடியாக தனது சட்டையை கழற்றி ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டினார். ரயில் ஓட்டுனர் இதை கவனித்ததால் ரயிலை நிறுத்தினார். இதனால், 2000 மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இந்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: 9 girl saved lives 2000 people
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!
*இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!
*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!
*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )
*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!
*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!