விடுதலைப் புலிகள் இலங்கை வந்த பின்னரே அரசாங்கம் தடை விதிப்பு

0
414
government banned LTTE arrived Sri Lanka

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே இந்த அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு வருவதற்கான தடையினை விதித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (government banned LTTE arrived Sri Lanka)

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,

வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 14 பேரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் இலங்கைக்கு வர அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலையும் விடுத்துள்ளது. எனினும் இந்த நபர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து கிளிநொச்சிக்கு சென்று அங்கு மக்களின் பணம் சேர்த்துள்ளனர்.

இதன்பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே அரசாங்கம் இப்போது அவ்வுறுப்பினர்களுக்கு எதிராக தடை விதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து உணர்வுபூர்வமாக சிந்திக்கும் நபர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

tags :- government banned LTTE arrived Sri Lanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites