இன்றைய ராசி பலன் 21-06-2018

0
435

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 6ம் தேதி,
21.6.18 வியாழக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8:52 வரை;
அதன் பின் நவமி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 6:20 வரை;
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today Horoscope 21-06-2018 )

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்:

பொது நலப்பணியில் ஆர்வம் உண்டாகும். திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்திகரமாகும். நிலுவைப் பணம் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

ரிஷபம்:

இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.

மிதுனம்:

சமூகத்தில் நற்பெயர் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும். லாபம் சராசரி அளவில் இருக்கும். பிராணிகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.

கடகம்:

மற்றவர் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபார நிலை தாமதகதியில் இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர்.

சிம்மம்:

எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவீர்கள். ஆதாயம் உயரும். பணியாளர்கள் வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

கன்னி:

இனிய பேச்சால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். நண்பரால் உதவி உண்டு.

துலாம்:

அறிமுகம் இல்லாதவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான பணவரவு இருக்கும். உடல் பலம் பெற சத்து நிறைந்த உணவு தேவை. எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகும்.

விருச்சிகம்:

எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு நிம்மதியளிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உறவினரின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

புதிய திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். மனைவியின் அன்பை பெற்று மகிழ்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பரிசு, பாராட்டை பெறுவர்.

மகரம்:

நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

கும்பம்:

நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பணியாளர்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்:

தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளால் திடீர் செலவு ஏற்படலாம்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 21-06-2018