டச்சு இறைச்சி கடைகள் எப்போதும் விலங்கு நலனைப் பற்றி கவலைப்படாது. சூடான நீர் கிடங்குகளில் பன்றிகளை மூழ்கடித்து உயிரிழக்கச் செய்து தோலுரிக்கின்றனர். இவ்வாறு பல கொடூரங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். டச்சு உணவு மற்றும் நுகர்வோர் உற்பத்தி பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு RTL Nieuws இந்த தகவலை வெளியிட்டது. (animals boiled alive dutch slaughterhouses)
கடந்த ஆண்டு பெல்ஜியம் நாட்டின் இறைச்சி கடைகளில் மிருகங்கள் வதைக்கப்படும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியான போது நெதர்லாந்திலும் மிருகங்களுக்கு இவ்வாறு நேரிடும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை எனவும், அதற்கான எந்த அடையாளங்களும் இருக்கவில்லையென, முன்னாள் மாநில செயலாளர் Martijn van Dam கூறினார்.
கடந்த 2 வருடங்களில் NVWA மையம் 19 இறைச்சி கடைகளுக்கு 48 முறை தண்டம் விதித்துள்ளது. 1500 முதல் 5000 யூரோக்கள் தண்டப் பணமாக விதிக்கப்படுகிறது.
60 டிகிரி சூடான நீர் விளிம்பு வரை நிரப்பப்பட்டிருக்கும் ஒரு பெரிய கிடங்கில், இரும்பு உலோகம் ஒன்றால் உள்ளே தள்ளப்பட்டு, கால்களை உதறிக் கொண்டு பரிதாபமாய் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில மிருகங்களின் தோல்கள் அவை உயிரோடு இருக்கும் போதே கொடூரமாய் உரிக்கப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிறுவனங்கள் முதலில் எச்சரிக்கப்பட்டு, பின் தண்டம் விதிக்கப்படும். அத்ற்கு பின்னரும் நிறுவனங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
tags :- animals boiled alive dutch slaughterhouses
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்