பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெற்ற ஏ குழுவின் உருகுவே மற்றும் சவுதி அரேபிய அணிகளுக்கிடையிலான போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியின் முடிவின் அடிப்படையில் இம்முறை உலகக்கிண்ணத்தின் இறுதி 16 அணிகளுக்குள் செல்லும் வாய்ப்பை உருகுவே மற்றும் ரஷ்ய அணிகள் பெற்றுள்ளன.
ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் இம்முறை உலகக்கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்குள் நுழையும் முதலிரண்டு அணிகள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் உருகுவே அணி லுயிஸ் சுவாரேஷ் 23வது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்த கோலின் உதவியுடன் தங்களது வெற்றியை பதிவுசெய்துக்கொண்டன.
இந்நிலையில் ஏ குழுவில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபிய அணிகள் இம்முறை உலகக்கிண்ணத்திலிருந்து முதலிரண்டு அணிகளாக வெளியேறுகின்றன.
எகிப்து அணி ரஷ்ய அணிக்கெதிரான போட்டியில்1-3 என்ற கோல் கணக்கிலும், உருகுவே அணிக்கெதிரான போட்டியில் 0-1 என்ற ால் கணக்கிலும் தோல்வியடைந்தது.
இதேவேளை சவுதி அரேபிய அணி ரஷ்ய அணிக்கெதிரான முதல் போட்டியில் 0-5 எனவும், உருகுவே அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கிலும் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
- பந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்ட சந்திமால்… : ஐசிசியின் அதிரடி நடவடிக்கை!!!
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
fifa world cup 2018 Uruguay vs Saudi Arabia news Tamil, fifa world cup 2018 Uruguay vs Saudi Arabia news Tamil, fifa world cup 2018 Uruguay vs Saudi Arabia news Tamil