இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகமாக கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் டி.சேஷ்நாராயண், ராயுடு நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் விளையாடிய ராயுடு, அந்த அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை குவித்திருந்தார்.
சென்னை அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கும் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.
இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ராயுடு இணைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
எனினும் இதனையடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் நடைபெற்ற யோ யோ டெஸ்டில் ராயுடு சித்தியடையாததால், அவரை இங்கிலாந்து தொடருக்கான அணிக்குழாமில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னாவும் நீண்ட நாட்களுக்கு பின்னர் தேசிய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்தாலும், அம்பத்தி ராயுடுவின் வாய்ப்பு பறிக்கப்பட்டமை மிகவும் வேதனைக்குறியது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஐ.பி.எல். தொடரில் கிட்டத்தட்ட அதிகமான ஓட்டங்களை குவித்தவர் அம்பத்தி ராயுடு. அதுமாத்திரமின்றி உள்ளூரில் நடைபெறும் அனைத்து 50 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடியுள்ளார். ஆனால் ஒரு உயர்தர உடற்தகுதி பரிசோதனையை வைத்து, அவரை உடற்தகுதி இல்லாதவர் என கூறுவது எந்த வித்ததிலும் நியாயமான செயல் அல்ல. சரியான உடற்தகுதி இல்லாதவர் எவ்வாறு நடைபெற்று வரும் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க முடியும்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வீரர்களுக்காக குரல் கொடுக்கும். ராயுடுவை அணியிலிருந்து நீக்கியமை தொடர்பில் நாம் கேள்வி எழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
HCA secretary questions dropping Ambati Rayudu news Tamil, HCA secretary questions dropping Ambati Rayudu news Tamil