கொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி

0
680
Two people killed circulatory accident Colombo

கொழும்பை அண்மித்த ராகம போலந்த பகுதியில் புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். (Two people killed circulatory accident Colombo)

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் மோதுண்டமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

புகையிரத பாதுகாப்பு கடவை மூடியிருந்த நிலையில், அதனூடாக பயணிக்க முயற்சித்த போதே இருவரும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

எனினும், உயிரிழந்தவர்கள் இருவரும் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் புகையிரத கடவைக்கு அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. எனினும் இந்த அனர்த்தம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Two people killed circulatory accident Colombo

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை