(tamilnews indian fisherman release sri lankan custody)
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மீனவ பிரதிநிதிகள் குழு இலங்கை செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் திகதி முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை அதாவது 38 மாதங்களில் 216 விசைப் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
அவற்றை காரைநகர், காங்கேசன் துறை, திருக்கோணமலை, மன்னார் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழக மீனவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் இந்திய அரசின் வேண்டுகோளால் 42 படகுகளை முதல் கட்டமாக விடுவிக்க இலங்கை அரசு உத்தவிட்டது.
இதனையடுத்து, தமிழக மீனவர்கள் குழு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு வந்து படகுகளை மீட்டுச் சென்றனர்.
இந்தநிலையில், இரண்டாம் கட்டமாக 10 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித்துறை அதிகாரிகள் மீனவ சங்கத் தலைவர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் தங்களது கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை தமிழக மீன்பிடித்துறை அதிகாரிகள் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இம்மாத இறுதிக்குள் அந்த குழு இலங்கைக்கு வந்து படகுகளை மீட்டுவர உள்ளதாகவும் எஞ்சியுள்ள பல கோடி மதிப்பிலான 174 படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், ஜீலை 4 ஆம் திகதி புதுடில்லியில் தமிழக மீன்பிடித்துறை செயலாளர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இலங்கை மீனவளத்துறை அதிகாரிகள் மத்தியில் மீண்டும் பேச்சுவார்தை நடைபெறவுள்ளது.
இதில் எஞ்சிய படகுகளை விடுவிப்பது குறித்தும் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தவிர்க்கும் வகையில் சர்வதேச கடல் எல்லையில் இருநாட்டு பாதுகாப்பு படையினரும் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுவது குறித்து பேச உள்ளதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(tamilnews indian fisherman release sri lankan custody)
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!
Tamil News Group websites
.