51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ!!!

0
679

பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்த போட்டியின் முதல் கோல், போர்த்துகல் அணியால் நான்காவது நிமிடத்தில் பெறப்பட்டது.

போர்த்துகல் அணியின் முன்னணி வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

தொர்ந்து பின்னடைவிலிருந்த ஸ்பெயின் அணி போட்டியை சமப்படுத்தும் நோக்குடன் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

போட்டியின் 18வது நிமிடத்தில் எதிரணியின் வீரரை காலால் உதைத்த குற்றச்சாட்டுக்காக ஸ்பெயினின் சேர்ஜியோ பஸ்கட்ஸ்க்கு மஞ்சல் அட்டை காட்டப்பட்டது.

எனினும் அதனை பொருட்படுத்தாது தங்களது ஆட்டத்தில் கவனம் செலுத்திய ஸ்பெயின் அணி 24வது நிமிடத்தில் டியாகோ கோஸ்டாவின் உதவியுடன் கோலடிக்க போட்டி 1-1 என சமனிலையடைந்தது.

பின்னர் இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் 28வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் பர்னோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் அணியின் இஸ்கோவை முட்டித்தள்ள அவருக்கும் மஞ்சல் அட்டை காட்டப்பட்டது.

முதலாவது பாதியின் சுவாரஷ்யமான பகுதியை நோக்கிச் செல்ல போட்டியின் 44வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டுமொரு கோலை அடித்து அணியை முதற்பாதி நிறைவில் 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

எனினும் பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் ஸ்பெயின் தங்களது முழு ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கியது. போட்டியின் 55வது நிமிடத்தில் டியாகோ கோஸ்டா தனது இரண்டாவது கோலை பதிவுசெய்து, போட்டியை 2-2 என சமனிலைப்படுத்த, 55வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நெகோ மீண்டுமொரு கோலை அடித்து, ஸ்பெயின் அணியின் முன்னிலையை 3-2 என உயர்த்தினார்.

இந்த போட்டியில் முதலாவது தடவையாக பின்னடைவை சந்தித்த போர்த்துகல் அணியின் போட்டியை தங்கள் பக்கம் திருப்புவதற்கு முனைந்தது.

எனினும் போர்த்துகல் அணியின் வாய்ப்புகளை ஸ்பெயின் அணி உடனுக்குடன் தடுத்து விளையாடியது. ஸ்பெயின் அணிக்கு இரண்டு கோல்களை பெற்றுக்கொடுத்த டியாகோ கோஸ்டா மைதானத்திலிருந்து 77வது நிமிடத்தில் வெளியேற, அவருக்கு பதிலாக இயாகோ அஸ்பாஸ் உள்நுழைந்தார்.

தொடர்ந்து கோலுக்காக போராடிய போர்த்துகல் அணிக்கு 88வது நிமிடத்தி்ல் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதனை சிறப்பாக கோலுக்கு திருப்பிய ரொனால்டோ அணியின் மூன்றாவது கோலை பதிவுசெய்து, 3-3 என போட்டியை சமப்படுத்தினார்.

இந்த கோலுடன் ரொனால்டோ தனது 51வது வாழ்நாள் ஹெட்ரிக் கோலையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இரண்டு அணிகளும் இறுதிவரை 3-3 என்ற கோல்கள் எண்ணிக்கையுடன் நீடிக்க, போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

<<Tamil News Group websites>>

portugal vs spain world cup 2018 results news Tamil, portugal vs spain world cup 2018 results news Tamil, portugal vs spain world cup 2018 results news Tamil