எமக்கு உத்தரவிட அமெரிக்காவுக்கு உரிமையில்லை – மகிந்த ராஜபக்‌ஷ

0
294
government fear make local authority election mahindha rajapaksha

(tamilnews next presidential election mahinda rajapaksha)
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி, அதுல் கெசாப்புடனான சந்திப்பின் போது, எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது.

இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

(tamilnews next presidential election mahinda rajapaksha)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites