விறுவிறுப்பான போட்டியில் இறுதி நிமிடத்தில் கோலடித்து உருகுவே திரில் வெற்றி!!!

0
714
uruguay vs egypt fifa world cup 2018 news Tamil

பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் உருகுவே அணி இறுதி நிமிட கோலால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

எகிப்து மற்றும் உருகுவே அணிகள் தங்களது முதல் லீக் போட்டியில் இன்று மோதிக்கொண்டன.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து இரண்டு அணிகளும் கோல்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டன. எகிப்து அணியை விட உருகுவே அணி தங்களது வாய்ப்புகளை அதிகரித்துக்கொண்டு வந்தது.

எனினும் இரண்டு அணிகளும் தங்களுக்கு கிடைத்த் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாத நிலையில், முதற்பாதி கோல்கள் இன்றி நிறைவுக்கு வந்தது.

உருகுவே அணியை பொருத்தவரையில் தங்களுடைய 18 உலகக்கிண்ண போட்டிகளில், முதற்பாதியில் சமனிலையில் முடித்து, இரண்டாவது பாதியில் வெற்றிபெற்றமை மூன்று சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஆகும்.

இதனால் போட்டி சமனிலையில் முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. குறித்த தரவினை போன்றே இரண்டு அணிகளும் 89வது நிமிடம் வரை கோலடிக்கமால் இருக்க, போட்டியின் சமனிலையின் உச்சத்தை தொட்டிருந்தது. இதற்கிடையில் வீரர்கள் மாற்றமும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

எனினும் போட்டி நிறைவடையவிருக்கும் 90வது நிமிடத்தி்ல் உருகுவே அணியின் டிபெண்டராக செயற்படும் ஜோஸ் கேமினேஷ் சிறப்பான கோலொன்றை அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

போட்டியில் மேலதிகமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும், குறித்த 6 நிமிடங்களில் விதிகளை மீறிய எகிப்து அணியின் அஹமட் ஹெகாஷி மற்றும் செம் மொர்சி ஆகியோர் மஞ்சல் அட்டைகளை பெற்றது மாத்திரமே மிச்சம்.

இவ்வருடத்தின் முதல் வெற்றியை பெற்ற உருகுவே அணிக்கு தற்போது ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

<<Tamil News Group websites>>

uruguay vs egypt fifa world cup 2018 news Tamil,uruguay vs egypt fifa world cup 2018 news Tamil, uruguay vs egypt fifa world cup 2018 news Tamil