அமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் முழு விவரம் உள்ளே

0
675
Complete Details Action Changes Emirate Visa Laws midleeast

Complete Details Action Changes Emirate Visa Laws midleeast

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் அமீரக பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு,

1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த கட்டணத்தில் இன்சூரன்ஸ் செய்தால் போதுமானது.

2. அமீரகத்தின் வழியாக பயணிக்கும் டிரான்ஸிட் பயணிகள் 48 மணிநேரம் வரை கட்டணம் இன்றி உள்ளே வந்து செல்லலாம், அதேபோல் 96 மணிநேரம் வரை நீட்டித்து தரப்படும் டிரான்ஸிட் விசாவிற்கு 50 திர்ஹம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

3. புதிய விசா தொடர்பான மாற்றங்களை அமீரகத்தில் உள்ள சுற்றுலாவாசிகள், ரெஸிடெண்ட் விசாவில் உள்ளவர்கள், குடும்ப விசாவில் உள்ளவர்கள், விசா முடிந்தும் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் ஆகியோரும் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

Complete Details Action Changes Emirate Visa Laws midleeast