11-ம் வகுப்பு புத்தகங்களின் விலை உயர்வு: மாணவர்கள் பாதிப்பு!

0
730
11 grade books price hike , india tamil news, india news, india, books price of tamilnadu,

{ 11 grade books price hike }

புதிய பாடத்திட்டத்தின் படி வெளியிடப்பட்டுள்ள 11-ம் வகுப்பு புத்தகங்களின் விலை அதிகரித்துள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிப் பாட புத்தகங்கள் கடந்த 11-ம் திகதி முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதையடுத்து புதிய பாடத்திட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட புத்தகம், இந்த ஆண்டு 1590 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. விலை அதிகமாக உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் நலச்சங்க தலைவர் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக புத்தகங்களின் விலையை அரசு குறைக்க வேண்டும் அல்லது அரசு பள்ளிகளை போலவே தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags; 11 grade books price hike

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*நிதி நெருக்கடியில் தள்ளாடும் காங்கிரஸ்: கட்சியினர் கைவிட்டதால் பொதுமக்களிடம் நிதி திரட்ட முடிவு!

*தலித் சிறுவர்களுக்கு அடி! உதை! – மகாராஷ்டிராவில் சாதிய கொடூரம்!

*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

*தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com