நான்கு வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் தொடர் வெற்றியை குறிவைக்கும் மே.தீவுகள்

0
590
West Indies vs Sri Lanka 2nd Test 2018 news Tamil

இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று குரோஸ் இஸ்லட்டில் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது.

இதிலும் மே.தீவுகள் அணி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பலமிழந்திருப்பதை அவதானித்த இலங்கை அணி, இந்த தொடர் இலகுவானதாக இருக்கும் என எதிர்பார்த்து களமிறங்கியது.

எனினும் தொடரின் ஆரம்பம் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலை முன்கொண்டு வந்தது. 226 ஓட்டங்களால் படுதோல்வி என்பது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸின் சதமும், லஹிரு குமாரவின் பந்து வீச்சு மாத்திரமே சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.

எனினும் இலங்கை அணி மேலும் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதாவது மெத்தியூஸ் மற்றும் லஹிரு குமார வெளியேறியுள்ளதால் அணியில் எப்படி மாற்றங்கள் ஏற்படப்போகின்றது?

மே.தீவுகளில் ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோரின் எடுபடாத பந்துவீச்சு, குசல் பெரேராவின் டெஸ்ட் வருகை அணிக்கு ஏமாற்றம், திடமான ஆரம்பம் இல்லை, மோசமான களத்தடுப்பு என இத்தனை பிரச்சினைகளையும் இலங்கை அணி எப்படி சமாளிக்கப்போகின்றது.

இந்நிலையில் இலங்கை அணி இன்றைய போட்டியில் 4 பந்து வீச்சாளர்கள் மற்றும் 7 துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தனஞ்சய டி சில்வா இன்று விளையாடினால் இந்த பிரச்சினை இலங்கை அணிக்கு இல்லை. அவர் விளையாடாவிட்டால் மேற்குறித்தவாறு இலங்கை அணி களமிறங்கும்.

அதாவது டில்ருவான் பெரேரா இன்று வெளியேற்றப்படுவார். அவருக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா இணைக்கப்படுவதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மஹேல உடவத்த இணைக்கப்படலாம். ஏற்கனவே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் பெரேரா மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடுவார்.

இதேவேளை வெற்றியுடன் களமிறங்கவுள்ள மே.தீவுகள் அணி 2014ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் தொடர் வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளது. இறுதியாக பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரை கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மே.தீவுகள் அணி கைப்பற்றிருந்தது. இதற்கு பின்னர் மே.தீவுகள் டெஸ்டில் மோசமாக செயற்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ள மே.தீவுகளின் ஒரே குறிக்கோள் தொடர் வெற்றிதான். இன்றைய போட்டியிலும் மே.தீவுகள் அணி மாற்றங்கள் இன்றி களமிறங்கும் என்பதுடன், இலங்கைக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

<<Tamil News Group websites>>

West Indies vs Sri Lanka 2nd Test 2018 news Tamil, West Indies vs Sri Lanka 2nd Test 2018 news Tamil