(Two Muslim Men killed Stealing Cattle Lynched Jharkhand)
ஜார்கண்ட் மாநிலத்தில் விற்பனைக்காக எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குட்டா மாவட்டத்தில் 13 எருமை மாடுகளை கொள்வனவு செய்து கொண்டு சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
பன்னட்டி கிராமம் அருகே வாகனத்தை இடைமறித்து நின்ற கால்நடை பாதுகாவலர்கள் எனக் கூறப்படும் சிலர், இரண்டு இஸ்லாமியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், இரண்டு பேரையும் கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து கொலையில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி வேனில் மாட்டுக் கறி ஏற்றிச் சென்றதாகக் கூறி அலீமுத்தின் அன்சாரி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Two Muslim Men killed Stealing Cattle Lynched Jharkhand)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்
- 67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!!
- வடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.!!
- புங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்
- மஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி
- சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது!!
- யாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்!
- முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்
- கோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி
- ஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்!
- கொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி
- காங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?