ரஷ்யாவில் இன்று ஆரம்பமாகியுள்ள பிபா உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் ரஷ்ய அணி தங்களது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இன்று நடைபெற்ற சவுதி அரேபியாவுக்கு எதிரான முதல் போட்டியில், ரஷ்ய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
தங்களது சொந்த ரசிகர் பட்டாளத்துக்கு மத்தியில் ஆடிய ரஷ்ய அணி இம்முறை உலகக்கிண்ணத்தில் சிறப்பான ஆரம்பத்தை பெற்றிருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.
ஆரம்பம் முதலே தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட ரஷ்ய அணி, கோலடிக்கும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டது.
இதன்படி போட்டியின் 12வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் மத்தியக்கள வீரர் யூரி கஷின்ஸ்கி கோலடித்து, அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து சவுதி அரேபிய அணி ஆக்ரோஷமாக ஆடிய நிலையில், 24வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் 9ம் இலக்க வீரர் எலன் ட்ஷெகோவ், சவீதி அரேபியாவின் 17ம் இலக்க வீரருடன் மோதுண்டு உபாதைக்குள்ளானார்.
தொடர்ந்து விளையாட முடியாத இவர் மைதானத்தைவிட்டு சோகத்துடன் வெளியேற, அவருக்கு பதிலாக 6ம் இலக்க வீரர் டெனிஸ் செரிஷேவ் மைதானத்துக்குள் நுழைந்தார்.
மைதானத்துக்குள் நுழைந்த செரிஷேவ் ஒருபக்கம் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க, போட்டியின் முதற்பாதிக்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கும் போது அணியின் இரண்டாவது கோலை அற்புதமாக பதிவுசெய்தார்.
இதன்படி முதற்பாதி நிறைவுக்கு வர, ரஷ்ய அணி 2-0 என்ற முன்னிலை வகித்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதியின் சுமார் 20 நிமிடங்கள் வரை எந்த அணிகளும் கோலடிக்கவில்லை. எனினும் போட்டியின் 71வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் எர்டம் ட்சுயூபா அணிக்காக மற்றுமொரு கோலை அடித்து முன்னிலையை 3-0 என உயர்த்தினார்.
தொடர்ந்து சவுதி அரேபிய அணி தங்களது வீரர்களை மாற்றி, மாற்றி மைதானத்துக்குள் அனுப்பிய போதும் எந்த பயனும் இல்லை. போட்டியில் மேலதிகமாக வழங்கப்பட்ட 4 நிமிடங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ரஷ்ய அணி மேலும் இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்தது.
90+1 டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது தனது இரண்டாவது கோலை அடிக்க, அலெக்ஸாண்டர் கொலோவின் போட்டியின் இறுதி நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்படி இம்முறை உலகக்கிண்ண போட்டியை ஏற்பாடுசெய்து நடத்தும் ரஷ்ய அணி தங்களது முதலாவது வெற்றியை ருசித்து, பிரகாசமான ஆரம்பத்தை பெற்றுள்ளது.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Russia beat saudi arabia World Cup 2018, Russia beat saudi arabia World Cup 2018