முதல் அறிமுக கால்பந்தாட்ட போட்டியில் சவுதியை வென்ற ரஷ்ய அணி​

0
787
tamilnews World Cup 2018 Russia thrash Saudi Arabia opener

(tamilnews World Cup 2018 Russia thrash Saudi Arabia opener)

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கால்பந்து போட்டியின் அறிமுக ஆட்டத்தில் ரஷ்ய அணி 5 க்கு 0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கிண்ண கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இறுதியாக 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கிண்ண போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 21-வது உலக கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இதில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் ஆரம்பமாகியது.

இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார்.

அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.

இந்த போட்டியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், ஃபிபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர்.

இந்த போட்டி ஆரம்பித்த 12 வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ ஒரு கோல் அடித்தார்.


அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார்.

இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் 71 வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார்.

இறுதி நேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

அதன்பின், ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார்.

சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இறுதியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை அள்ளியது.

இந்த போட்டியில் ரஷ்யா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்தது.

தற்போது ‘அசிலிஷ்’ பூனையின் ஆருடம் பலித்துவிட்டது.

நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து – உருகுவே, மொராக்கோ – ஈரான், போர்ச்சுக்கல் – ஸ்பெயின் ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளன.

(tamilnews World Cup 2018 Russia thrash Saudi Arabia opener)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites