முன்னாள் போராளிகள் தமிழ் மக்கள் இல்லையா? பேரினவாத பார்வை மாறாத மைத்திரியின் கையிலா தமிழினத்தின் தீர்வு?

0
865
President Maithripala Sirisena Refuses Ex Ltte Members Resettlement

இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குற்றி இலங்கை அரசுகள் செயலாற்ற தொடங்கிய காலகட்டம் முதல் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களில் இருந்து வேறுபட்ட ஒரு அமைப்பாகவே சிங்கள மக்கள் முன்பும் சர்வதேசத்தின் முன்பும் சித்தரிப்புகள் இடம்பெற்று வந்தது. President Maithripala Sirisena Refuses Ex Ltte Members Resettlement

போர் முடிவுற்ற பின்பும் தமிழ் மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சி அமைத்த மைத்திரியும் இந்த வரைவிலக்கணத்தை மறந்து போகாத ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தி வருகின்றார்.

இறுதி யுத்தத்துக்கு பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு தமது செயற்ப்பாடுகளை நிறுத்தி கொண்ட பின்னர் , தமிழ் மக்கள் தொடர்ந்தும் மாவீரர்களை நினைவு கூறும் தமது வழக்கத்தை முன்னெடுத்து செல்வதன் மூலம் புலிகளும் மக்களும் வேறானவர்கள் அல்ல அவர்கள் எமது பிள்ளைகள் என்பதை உணர்த்திய பின்பும் கூட இன்னமும் மைத்திரி தனது எண்ணத்தை மாற்றி கொள்ள தயாராக இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குறேன் என்கின்ற வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்த மைத்திரிக்கு முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இன்னமும் பயங்கரவாதிகளாக தெரிவது மிகவும் ஆச்சரியம் தரும் ஒரு விடயமே.

புனவாழ்வு அளிக்கப்பட்டு சமுக நீரோட்டத்தில் கலக்கப்பட்ட முன்னாள் போராளிகள் விடயத்தில் , அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிவாரணம் வழங்குதல் சம்பந்தமாக மைத்திரி கூறியுள்ள கருத்து அவரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்குதல் என்பது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயற்ப்பாடு எனவும் அவ்வாறாக நிவாரணம் வழக்கப்போவதில்லை எனவும் மைத்திரி கூறியுள்ளார்.

இதன் மூலம் மைத்திரி வெளிப்படுத்தியிருக்கும் எண்ணப்பாடு என்ன?

முன்னாள் விடுதலைப்புலிகளை மைத்திரி தமிழ் மக்களில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் புலிகள் வேறு மக்கள் வேறு என்னும் புளித்து போன கொள்கையை கொண்டவராக தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவர் விரும்புகின்றார்.

முன்னைய அரசுகள் இந்த நிலைப்பாட்டில் தான் தமிழ் மக்களிடம் பலத்த தோல்வியை கண்டனர் என்பது எப்போதுமே மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமிழ் மக்களுக்காக போராடும் விடுதலை அமைப்பு என்பதை ஏற்றுக்கொண்டு சிந்தித்திருந்தால் பல விடயங்களை இலங்கை அரசுகள் நடைமுறைப்படுத்தி இருக்கலாம். இந்த தவறான கணிப்புகளே பல காலமாக தமிழ் மக்கள் இலங்கை அரசுகளின் நடைமுறைகளை நிராகரித்து கொண்டமைக்கு காரணமாக அமைந்தது. இந்த வரலாற்று தவறை மைத்திரியும் தொடருவது இலங்கை போன்ற ஒரு பேரினவாத நாட்டில் புதிய விடயம் இல்லை.

இந்த நிலைப்பாட்டில் நின்று கொண்டு மைத்திரியால் தமிழ் மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியமாகவே இருக்கப்போகிறது.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு