சர்ச்சையை ஏற்படுத்திய ரங்கே பண்டாரவின் மகன் விடுதலை..!

0
211
Palitha Range Bandara son Yashoda granted bail

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.(Palitha Range Bandara son Yashoda granted bail)

சிலாபம் நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.

கடந்த 06 ஆம் திகதி அதிகாலை வேளையில், ஆரச்சிக்கட்டு, கோட்டபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடரபில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகனான, யசோத ரங்கே பண்டார ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி அதிகாலை கைது கைது செய்யப்பட்டார்.

குறித்த வாகனம், தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் பயணித்திருந்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை, குடி போதையில் வாகனம் செலுத்தி, விபத்து ஏற்படுத்தியமை, தடை செய்யப்பட்ட கத்தி கட்டளைச் சட்டத்தின கீழ் வாள் ஒன்றை கைவசம் வைத்திருந்த தவறைப் புரிந்தமை உள்ளிட்ட குற்றசாட்டுகனின் கீழ், யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் பலியானதோடு இது தொடர்பில், பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tags :- Palitha Range Bandara son Yashoda granted bail

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites