மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு

0
1460
mystery continues Mannar Human skeletons recovery

மன்னார் சதோச மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (mystery continues Mannar Human skeletons recovery)

மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா அகழ்வு பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில், நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற இடத்தை சூழ்ந்து கொண்டதை அடுத்து, இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்றைய தினம் 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7.00 மணியளவில் இந்த அகழ்வு பணி இடம்பெற்று வந்தது.

இதன்போது இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மனித எச்சங்கள் கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பணியாற்றும் சட்டத்தரணிகள் குழுவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அகழ்வின் போது முழு மனித எலும்புக்கூடு மற்றும் விரல் ஒன்றில் மோதிரம் போன்ற இரும்பொன்றும் காணப்பட்டுள்ளது.

ஆகவே, இது இரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் என்றும் சட்டத்தரணிகள் குழுவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நகர நுழைவாயில் என்பதால் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இந்தப் பகுதியில் இராணுவத்தினர் அதிகளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளில் களனி பல்கலைக்கழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்திருந்தனர்.

விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ். ராஜபக்ச தலைமையிலான குழுவினரும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து இந்த அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- mystery continues Mannar Human skeletons recovery

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites