அஞ்சல் ஊழியர்கள் வழமையான சேவைக்கு திரும்ப வேண்டும் – அமைச்சு செயலாளர் கோரிக்கை

0
435
Mail services government taken problems postal service workers

(Mail services government taken problems postal service workers)

அஞ்சல் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அஞ்சல் ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடிவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அஞ்சல் சேவையை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கிலும் அஞ்சல் சேவை ஊழியர்களை சேவைக்கு திரும்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(Mail services government taken problems postal service workers)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites