ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது

0
980
tamilnews Ranil Wickremesinghe contest presidential election laxman

(tamilnews Ranil Wickremesinghe contest presidential election laxman)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராயின் எந்தவொரு வேட்பாளருக்கும் பிரச்சினை ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (14) மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைப் பார்க்கும் போது இருவரும் எதிர்காலத்தில் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஊடக சந்திப்பொன்றை கூட நடத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

(tamilnews Ranil Wickremesinghe contest presidential election laxman)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites