விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகை : வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த பொதுமக்கள்..!

0
36
Malayala Actress Megha Mathew Car accident,Malayala Actress Megha Mathew Car,Malayala Actress Megha Mathew,Malayala Actress Megha,Malayala Actress

நடிகை மேகா மேத்யூ, கார் விபத்தில் சிக்கி ஒருமணி நேரமாக உயிருக்கு போராடிய வேளையில் பொதுமக்கள் அவரை காருடன் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.(Malayala Actress Megha Mathew Car accident)

மேகா மேத்யூ, மலையாளத்தில் ”ஒரு மெக்ஸிகன் அபரதா”, ”தியான்”, ”ஆதம் ஜோன்”, ”சகாவின்டே ப்ரியசகி” உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனியாக தனது அண்ணனின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக, காரில் கோட்டயம் சென்றுள்ளார். டிரைவர் இல்லாத காரணத்தினால் தானே காரையும் ஓட்டிச் சென்றுள்ளார்.

மேகா, எர்ணாகுளம் அருகே முளன்துருத்தி பகுதியில் சென்றுக்கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்றில் மோதினார். இதில் மேகாவின் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விட்டது.

இதில் காயமடைந்த மேகா காருக்குள் மயங்கிக் கிடந்தார். காருக்குள் இருப்பவர் இறந்திருக்கலாம் என்று கருதி, அந்தப் பக்கமாக வந்தவர்கள் கவிழ்ந்த காரை புகைப்படம் மட்டுமே எடுத்துள்ளனர்.

இதையடுத்து, காரினுள் மேகா மேத்யூ சுமார் ஒரு மணி நேரமாக உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்நிலையில், அங்கு வந்த புகைப்படக்காரர் ஒருவர் மேகா உயிருடன் இருப்பதை கண்டு பதறி போய் அவரை மீட்க முயற்சித்துள்ளார்.

அதன் பின் அந்தப் பகுதியினருடன் சேர்ந்து அவரை மீட்டு கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காயமடைந்த மேகா மேத்யூவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது நடிகை மேகா மேத்யூ தனது டுவிட்டர் பக்கத்தில் விபத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும், எல்லோருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

பிரபல இசையமைப்பாளர் மீதான கோபத்தில் ஒல்லி நடிகரின் ரசிகர்கள்..!

பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Malayala Actress Megha Mathew Car accident

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 13-06-2018