பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி

0
795
Canada Labour Market Wages

ஜி-7 மாநாட்டில் 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் சேகரிக்கப்பட்டுள்ளது. Women Empowerment Fund Canada

கியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிதி உலகில் மிகவும் பாதிக்கபபட்டுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது.

கனடா தனது பங்காக 400 மில்லியன் டொலர்களை இந்த உதவித் திட்டத்திற்காக வழங்குகின்றது. எஞ்சிய தொகையை ஜி-7 குழுமத்தின் ஏனைய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பன இணைந்து வழங்குகின்றன.

எனினும் இந்த கூட்டு நிதி உதவித் திட்டத்திற்கு அமெரிக்கா தனது நிதிப் பங்களிப்பினை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இதற்கு நிதிப் பங்களிப்பு செய்யாமையை கனேடிய பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டினை கனடா தலைமையேற்ற நடாத்திய நிலையில், இவ்வாறு வறுமைப்பட்ட நாடுகளின் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கான நிதி உதவியினைத் திரட்டித் தருமாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடம் 30 அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.