அறிமுகப்போட்டியில் சதம் விளாசிய உஸ்மான் கவாஜா!

0
606
Usman Khawaja Glamorgan debut ton news Tamil

அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா கவுண்டி அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

கவுண்டி அணியான கிளாமர்கன் அணிக்காக அறிமுகமாகியுள்ள உஸ்மான் கவாஜா, வர்விக்ஸையர் அணிக்கெதிரான போட்டியில் விளையாடி வருகின்றார்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா 416 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்தார். இதில் 16 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இரண்டாவது இன்னிங்ஸில் கிளாமர்கன் அணி 323 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு உஸ்மான் கவாஜா மிக முக்கியமாக இருந்தார்.

இவரின் துடுப்பாட்டத்துக்கு உதவியாக அணித்தலைவர் கிரிஸ் குக் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இருவரும் 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தார்.

உஸ்மான் கவாஜா டி20 அணிக்குழாமுக்காக கிளாமர்கன் அணியில் இணைக்கப்பட்ட போதிலும், தற்போது டெஸ்ட் குழாமில் ஷோர்ன் மார்ஸின் இடத்தை நிரப்பி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

Usman Khawaja Glamorgan debut ton news Tamil, Usman Khawaja Glamorgan debut ton news Tamil