அண்ணாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.(Kadaikutty Singam Karthi open talk)
2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் “கடைக்குட்டி சிங்கம்”. கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, “பசங்க” பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
சத்யராஜ், சூரி, சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், பானு ப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், ஸ்ரீமன், இளவரசு, சரவணன் , மாரிமுத்து, ஜான் விஜய், சௌந்தர்ராஜன் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படம் கார்த்தி பேசும்போது.. :-
“கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார்.
இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
பிழைக்க வழியின்றி பட்டணத்திற்கு சென்றவர்களை மீண்டும் விவசாயத்தை நோக்கி, கிராமங்களுக்கு வரவழைக்க வேண்டும் என்பது தான் கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம்.
நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
மேலும், சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்” இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!
* டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
* மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!
* பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!
* பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tags :-Kadaikutty Singam Karthi open talk
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-