ஆப்கான் மக்களின் வியூகம் – குண்டுத் தாக்குதலை சமாளிக்க புதிய திட்டம்

0
754
supplies purchased Internet operators escape attacks terrorists

(supplies purchased Internet operators escape attacks terrorists)

ஆப்கானிஸ்தான் மக்கள் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை இணைய வழி செயலிகள் மூலம் கொள்வனவு செய்து கொள்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தினந்தோறும் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது.

குண்டு வெடிப்பு, தற்கொலை தாக்குதல்கள் அன்றாட வாடிக்கையாக உள்ளது. பெண்கள் பாதையில் நடந்து செல்ல முடியாதளவுக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் வெளியில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது.

இருந்த போதும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

அதற்காக தற்போது இணைய வழி செயலிகள் வர்த்தகத்தை மக்கள் நாடுகின்றனர்.

அதன்மூலம், வீட்டு உபயோக பொருட்கள், கணிணிகள், அழகுசாதன பொருட்கள், தளபாடங்கள், வாகனங்கள் மற்றும் நிலம் வாங்குதல், விற்றல் என அனைத்தும் இணைய வழி செயலிகளிகள் ஊடாகவே நடைபெறுகிறது.

அதற்காக தற்போது ஆசாத் பஜார் ஆப், அபோம் ஆப், ஜே.வி பஜார் டாட்காம் மற்றும் ‌ஷரீனாஸ் டாட்காம் என்பன போன்ற புதிய இணைய வழி செயலிகள் ஊடான வர்த்தக நிறுவனங்கள் தோன்றியுள்ளன.

இணைய வழி செயலிகள் ஊடாக பொருட்கள் வாங்குவது தங்களுக்கு ஒரு புதிய அனுபவம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம், குறைந்த செலவில் விரும்பிய பொருட்கள் பாதுகாப்பாக கிடைக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

அதேநேரத்தில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இணைய வழி செயலி வர்த்தகர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை தாக்குதல்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதால் மக்கள் கூட்டம் இல்லாத பாதைகள் வழியாக சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

நிலைமை மோசமாக இருக்கும் பட்சத்தில் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதும் அவை வழங்கப்படுகின்றன.

50 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானில் தற்போது 50 க்கும் மேற்பட்ட இணைய வழி செயலி வர்த்தக நிறுவனங்கள் புதிதாக செயற்படுகின்றன.

அவற்றில் பெரும்பாலானவை அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(supplies purchased Internet operators escape attacks terrorists)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites