தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பம்; விடுமுறைகள் இரத்து..!!

0
504
Continuous strike postal workers canceled vacation

 

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.(Continuous strike postal workers canceled vacation)

இன்று பிற்பகல் 4 மணி வரை தபால் நிலையங்களில் சாதாரண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், 4 மணியின் பின்னர் குறித்த ஊழியர்கள் பணிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தபால் சேவை ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்துச் செய்ய தபால் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

23 தபால் தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

tags :- Continuous strike postal workers canceled vacation
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites