அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa )
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ஆதரவு குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இருக்கும் ஆதரவை நான் அறிவேன்.
2020 ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கும் போது, கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான பொதுமக்களின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.
எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவது பொய்.
எமக்குள் எந்த அதிகாரப் போட்டியும் கிடையாது. எனது சகோதரர்களுடன் இணைந்து நாட்டில் வணிகம் செய்வதாக குற்றம்சாட்டியவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.
கூட்டு எதிரணியில் இருப்பவர்கள் ராஜபக்ஷக்கள் மட்டுமல்ல. ஏனைய பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tags :- gotabaya rajapaksa mahinda rajapaksa
- “ஜனாதிபதி மோசமான சிங்கள பௌத்த பேரினவாதி” – விக்ரமபாகு கருணாரத்ன
- தலைமைத்துவ மாற்றத்தினாலே சிறந்த பெறுபேறுகளை எதிர் பார்க்கமுடியும்
- இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!
- கலவரத்தின் போது முகநூல் முடக்கத்தின் காரணம் இதோ…!!
- உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சில விசித்திரமான முறைகள்!
- மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்
- தந்தைக்கு கோடரியால் மண்டையில் போட்ட மகள்..!!!
- இரண்டுமுறை உயிர்த்த குழந்தை உயிரிழந்தது; சோகத்தில் மூழ்கியது சொந்தக் கிராமம்!!
- திடீரென கட்டாருக்கு பறந்த ரணில்!!!
- குளிர் நீரில் கூடுதலான நேரம் நிர்வாணமாக நின்று பெண்கள் சாதனை..!!
- எதிர்வரும் 12 ஆம் திகதிக்காக சிங்கபூரில் கால் பதித்த அமெரிக்க வடகொரிய தலைவர்கள்